எனவே செல்போன் கட்டணம் உயரும் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது. ஆனால், செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று தெரிவிக்கையில், ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிக தொகைக்கு சென்று இருப்பதால் செல்போன் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இருக்கிறோம்’ என்று கூறியது. தற்போது செல்போன் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தில் 13 முதல் 14 சதவீதம் வரை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான பயன்பாட்டுக் கட்டணத்துக்கு செலுத்த வேண்டி உள்ளது.
எனவே, செல்போன் கட்டணத்தை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு காத்து இருப்பதாக செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செல்போன் நிறுவனங்களுக்கு பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த வாரம் கூறுகையில், செல்போன் கட்டண விகிதத்தை மத்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்புதான் முடிவு செய்யும். ஒரு நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி