செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…

இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…

இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!… post thumbnail image
புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, இன்று அமலுக்கு வருகிறது. எனவே, இன்று முதல், பயண தேதியை தவிர்த்து, 120 நாட்களுக்கு முன்பிருந்து ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான முன்பதிவு காலம் 360 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.

இதுபோல், ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக இன்று உயருகிறது. புதிய கட்டணம் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்குமாறு அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே இருப்பில் உள்ள 5 ரூபாய் டிக்கெட்டுகளில், 10 ரூபாய் என முத்திரையிட்டு வினியோகிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி