இந்நிலையில், சென்னையில் கார்த்திகாவின் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் சஞ்சய், சந்துரு ஆகியோர் பவ்சான் பாயிடம் ரகசியமாக பிசினஸ் செய்து வருகிறார்கள். ஒருநாள் ரூ.8 கோடி மதிப்புள்ள வைரத்தை ஷபீக் வாங்கிவிட்டு திரும்பி வரும்போது, போலீஸ் இவரை பின்தொடர்கிறது. அப்போது, சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு வந்து பின்னர் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் கார்த்திகாவை சந்திக்கும் ஷபீக் அவளிடம் தன்னிடம் இருக்கும் வைரத்தை கொடுத்து அனுப்புகிறான்.
ஷபீக் கொடுத்தது வைரம் என்று தெரியாமலேயே அதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வருகிறாள் கார்த்திகா. வைரம் கைக்கு கிடைக்காததால் கோபமடைந்த பவ்சான் பாய், ஷபீக்கின் தங்கைகளை கடத்தி வைத்துக் கொண்டு, வைரத்தை கொடுக்குமாறு மிரட்டுகிறார். இதனால், கார்த்திகாவிடம் கொடுத்த வைரத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் ஷபீக்.
ஆனால் சென்னையிலோ கார்த்திகாவுக்கு வேறு ஒரு பிரச்சினை வருகிறது. தன்னுடைய காதலரான சார்லஸ் தன்னை திருமணம் செய்ய அவளிடம் வற்புறுத்துகிறார். இதற்கிடையில், கார்த்திகா கம்பெனியில் சஞ்சய், சந்துரு பணத்தை கையாடல் செய்த விஷயம் மேனேஜருக்கு தெரிந்ததும், அவரை இருவரும் சேர்ந்து கொன்று விடுகின்றனர். இதை கார்த்திகா நேரில் பார்த்து விடுகிறார். இதனால், அவளை தீர்த்துக்கட்ட சஞ்சய், சந்துரு இருவரும் திட்டமிட்டுகின்றனர்.இறுதியில், கார்த்திகாவிடமிருந்து ஷபீக் வைரத்தை வாங்கி, தங்கைகளை மீட்டாரா? சார்லஸ்-கார்த்திகா காதல் என்னவாயிற்று? சஞ்சய்-சந்துரு திட்டம் என்னாவயிற்று? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.படத்தில் சார்லஸாக நடித்திருக்கும் சரண் குமார், படம் முழுக்க நாயகியை பின் தொடர்ந்து அப்பாவி தனமாக வலம் வந்திருக்கிறார். நாயகி ஜெய் குஹேனி காதலில் அதிக ஈர்ப்பு இல்லாமல் சராசரி பெண் போல் நடித்து மனதில் பதிந்திருக்கிறார். இவர் பேசும் வசனங்களும், வார்த்தை உச்சரிப்புகளும் திரையில் பார்ப்பதற்கு நெருடலாக இருக்கிறது.சபீக்காக நடித்திருக்கும் மிஷல் நடுத்தர இளைஞனாகவும் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் அப்பாவியாகவும் நடித்திருக்கிறார். சஞ்சய், சந்துரு ஆகியோர் வைரத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை வைத்தே ரசிகர்களை வளைத்துப்போட நினைத்திருக்கிறார் இயக்குனர் சத்தியமூர்த்தி. தலைப்பிலேயே மதங்களின் ஒற்றுமையை சொல்லிய இயக்குனர், படத்திலும் பல புதுமையை செய்திருக்கிறார். ஆனால், அந்த புதுமையை கொஞ்சம் ஓவராக செய்திருக்கிறார். அதுதான் படத்திற்கு பெரிய பலவீனம். மற்றபடி படத்தை நல்ல திரில்லராக உருவாக்கியிருக்கிறார். சித்தார்த்த மோகன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையும் சுமார்தான். ஸ்ரீசரவணன், ஜி.மனோகரன் ஆகியோர் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.
மொத்தத்தில் ‘சிஎஸ்கே’ புதுமை………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி