செய்திகள்,விளையாட்டு வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!… post thumbnail image
மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2-வது காலிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேடடிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ரோகிச் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த ரோகித் அதை பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் லெக் பை மூலம் 4 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் தவான் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கினார். 3-வது ஒவரின் முதல் பந்தில் ரோகித் ஒரு பவுண்டரி அடித்தார். அத்துடன் 4-வது ஓவரின் 2-வது பந்தில் ஸகர்லெக் திசையில் அருமையாக பவுண்டரி அடித்தார். இதனால் இந்தியா முதல் 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது.

வேகபந்து வீச்சை இந்தியா அடித்து விளையாடியதால் வங்காளதேச கேப்டன் மோர்தசா 6-வது ஓவரில் சுழற்பந்தை கொண்டு வந்தார். நசீர் ஹுசைன் வீசிய அந்த ஓவரில் இரண்டு ரன்கள் அடித்தனர். மோர்தசா வீசிய 7-வது ஓவரில் தவான் ஒரு பவுண்டரி அடித்தார்.நசீர் வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஒரு பவுண்டரி விரட்டினார். தொடக்கம் முதலே ரோகித் அதிரடி காட்டி வந்தார்.
கட்டாய பவர் பிளே (முதல் 10 ஓவர்) முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 16.3 ஓவரில் 75 ரன்கள் இருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தில் தவான் 30 ரன் எடுத்திருக்கும்போது ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 50 பந்தில் 3 பவுண்டரி இந்த ரன்னை எடுத்தார்.அடுத்து விராட் கோலி ரோகித் உடன் ஜோடி சேர்ந்தார். இவர் 3 ரன் எடுத்த நிலையில் 18-வது ஓவரின் 5- வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலி விக்கெட்டை ருபெல் கைப்பற்றினார்.

அடுத்து ரோகித் உடன் ரஹானே ஜோ சேர்ந்தார். ரஹானே 37 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 19 ரன் எடுத்திருக்கும்போது தஸ்கின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 28 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. ஒருபுறம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் ரோகித் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். 35-வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ரோகித்- ரெய்னா பந்தை நாளாபுறம் விளாசித் தள்ளினார்கள்.பவர் பிளே ஓவரின் முதல் மற்றும் 3-வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 37-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ரெய்னா சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 38-வது ஓவரை ருபெல் வீசினார. இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கிடைத்தது. 39-வது ஓவரை தஸ்கின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து முடிந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியது. அந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடிக்க 10 ரன்கள் கிடைத்தது.40-வது ஓவரை ருபெல் வீசினார். புல்டாசாக வந்த 4-வது பந்தை தூக்கி அடித்தார் ரோகித். ஆனால் நடுவர் நோ-பால் என அறிவித்தார். இதனால் ரோகித் 90 ரன்னில் பிழைத்தார். அந்த ஓவரின் 5-வது பந்தில் ரெய்னா பவுண்டரி அடித்தார். இதனால் அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

இந்தியா பவர் பிளேயில் 50 ரன்கள் குவித்தது. 41-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா அரை சதம் அடித்தார். 42-வது ஓவரின் கடைசில் பந்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். உலகக்கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் முதல் சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக அவருக்கு இது 7-வது சதமாகும்.
சிறப்பாக விளையாடிய ரெய்னா 44-வது ஓவரின் 5-வது பந்தில் அவுட் ஆனார். அவர் 57 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.அடுத்து ரோகித் சர்மாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். 46-வது ஓவரை ருபெல் வீசினார். இந்த ஓவரில் சர்மா ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அடுத்த ஓவரை தஸ்கின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் அடித்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். ரோகித் சர்மா 126 பந்தில் 3 சிக்சர், 14 பவுண்டரியுடன் 137 ரன்கள் குவித்தார்.அடுத்து தோனியுடன் ஜடேஜா சேர்ந்தார். ஜடேஜா களம் இறங்கியது முதல் அதிரடியாக விளையாடினார். 48, 49-வது ஓவரில் தலா இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 49-வது ஓவரின் கடைசி பந்தில் தோனி அவுட் ஆனார். தோனி 11 பந்தில் 6 ரன் எடுத்தார். அடுத்து அஸ்வின் களம் இறங்கினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஜடேஜா 10 பந்தில் 23 ரன்னுடனும், அஸ்வின் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். வங்காள தேச தரப்பில் தஸ்கின் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி