சென்னை:-அஜீத்–ஷாலினி தம்பதிக்கு கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்களுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தார்கள். அடுத்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.
தங்களின் முதல் பெண் குழந்தைக்கு ஜாதகம் கணித்து அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது ஆண் குழந்தைக்கும் ஜாதகம் கணித்து பெயர் தேர்வு செய்து வருகிறார்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர் வைக்கின்றனர். இதற்காக நிறைய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி, கையெழுத்திட்டு அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அந்த சான்றிதழில் தந்தை பெயர் அஜீத்குமார் என்றும் தாயார் பெயர் ஷாலினி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திருவான்மியூர் வீட்டு முகவரி, குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முகவரி போன்றவையும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி