செய்திகள்,விளையாட்டு அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…

அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…

அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை… post thumbnail image
மெல்போர்ன்:-இந்திய அணியின் கேப்டன்களில் ‘கூல் கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோனியின் வழி என்றுமே தனி வழி தான். கடந்த 3 ஆண்டுகளாக விக்கெட் கீப்பருக்கான தொடர் பயிற்சிகள் எதிலும் டோனி ஈடுபடுவதில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?… 3 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தொடர்ச்சியான விக்கெட் கீப்பிங் பயிற்சிகளில் ஈடுபடுவதே இல்லை. வலைப் பயிற்சியின் போது அவரை விக்கெட் கீப்பிங் கிளவுஸ்களோடு பார்ப்பதே மிகவும் அரிதானது என்கின்றனர் பயிற்சியாளர்கள். பீல்டிங், கேட்சிங், மற்றும் பேட்டிங் பயிற்சிகள் மேற்கொள்ளும் டோனி எப்போதாவதுதான் ’கீப்பிங்’ பயிற்சி மேற்கொள்கிறார். இருந்தும் டோனி போட்டியின் பொது மிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்.

90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் உட்பட) 294 பேரையும், 260 ஒருநாள் போட்டிகளில் 325 பேரையும் மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளார். டோனியை விட 2 டெஸ்ட் மேட்சுகள் குறைவாக விளையாடியுள்ள முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இதிலிருந்தே தெரியும் டோனியின் விக்கெட் கீப்பிங் ஆளுமை.
இது மட்டுமல்லாது பேட்டிங் மூலமாகவும் இந்திய அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் வெற்றி ரகசியம் ‘குறைவான பயிற்சி, அதிக வெளிப்பாடு’ என்பதே.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி