செய்திகள்,திரையுலகம் தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!…

தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!…

தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 பாகங்கள் வந்து விட்டது. தற்போது 7வது பாகம் வர இருக்கிறது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. யுனிவர்செல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

முந்தைய பாகங்களில் ஹீரோவாக நடித்து வந்த பால் வாக்கர், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கார் விபத்தில் இறந்து விட்டதால், கதையில் சில மாற்றங்களை செய்து எடுத்திருக்கிறார்கள். வின் டீசல், ட்வைன் ஜான்சன், மைக்கேல் ராட்ரிகுவைஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வான் இயக்கி உள்ளார். படத்தின் தமிழாக்க பணிகள் மும்பையில் நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி