வாஷிங்டன்:-இண்டர்நெட்டில் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் என்ற படம் ஒளிபரப்பானது. அதில் நடித்த நடிகை ஒருவர் ஒபாமா மனைவி மிச்செலி உள்ளிட்ட பிரபலங்கள் போன்று மேக்–அப் போட்டு நடித்தார். அந்த படத்தை வைத்து அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி, நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பியது.
அந்த நிகழ்ச்சியை வழங்கிய தொகுப்பாளர் ரோட்னர் படிகோரா, படத்தில் மிச்செலி போன்று மேக் அப் போட்டு நடித்த நடிகை மனித குரங்கு போன்று இருந்தார் என தெரிவித்தார். இச்சம்பவம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ரோட்னர், அதிபர் ஒபாமா மனைவி மிச்செலுக்கு விளக்கம் அளித்தும் வருத்தம் தெரிவித்தும் கடிதம் அனுப்பினார். அதில் நான் தங்களை மனித குரங்கு என தெரிவிக்கவில்லை. ஆனால் உங்களை போன்று நடித்த நடிகையை தான் அவ்வாறு கூறினேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி