இது ஒருபுறம் இருக்க, ஜெயப்பிரகாஷின் இன்னொரு தம்பியான அம்ருத்கலாம் வேறொரு ஜாதிப் பெண்ணை திருமணம் கொண்டதால் அவரை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதுடன், அவரிடம் இருந்த கால்பந்தாட்ட அணியையும் பறித்து கொள்கிறார் ஜெயப்பிரகாஷ். தற்போது தோல்வியில் துவண்டு கிடக்கும் ஜூனியர் அணியை முன்னுக்கு கொண்டுவர அம்ருத்கலாம் முயற்சி எடுக்கிறார். அந்த ஊரில் நடக்கும் சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ள செய்து அவர்களை இறுதிப் போட்டி வரை கொண்டு செல்கிறார்.இறுதிப் போட்டியில் சீனியர் அணியும், ஜூனியர் அணியும் மோதுகிறது. அதில் யார் வென்றார்கள்? ஜெயப்பிரகாஷின் குடும்ப பிரச்சினை என்ன ஆனது? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். நாயகர்களாக நடித்திருக்கும் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் கதையை உணர்ந்து படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். பெரிய அளவில் நடிப்பதற்கு இவர்களுக்கு வாய்ப்பு வழங்காதது சற்று வருத்தமே. நாயகியாக வரும் நித்யா ஷெட்டி கண்களாலேயே பேசுகிறார். கால்பந்தாட்டம், குடும்ப பிரச்சினை குறித்தே படம் உருவாகியிருப்பதால் இவருக்கான காதல் காட்சிகள் மிகவும் குறைவு.
ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பால் மிளிர்கிறார். அம்ருத்கலாம், சி.கே.செந்தில்குமார் இருவரும் தமிழ் சினிமாவுக்கு புதிய வரவு என்றாலும், அவர்களுடைய நடிப்பில் அது தெரியவில்லை.விளையாட்டை மையப்படுத்தி எடுத்தியிருக்கும் இயக்குனர் மிதுன் மாணிக்கம், இதில் ஒரு குடும்ப பிரச்சினைக்கான முடிவையும் அற்புதமாக சொல்லியிருக்கிறார். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுத்த இவர், அந்த விளையாட்டை படத்தில் ஒரு பொருட்டாகவே காட்டாததது வருத்தம்தான். சுவாமிநாதன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
மொத்தத்தில் ‘ஐவராட்டம்’ ஆட்டம்…………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி