பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா, இன்சூரன்ஸ் மசோதா தாக்கல் உள்பட முக்கியமான விவாதங்கள் நடைபெறும் சமயத்தில் ராகுல் காந்தி ஓய்வு எடுக்க சென்றதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தனது விடுப்பை மீண்டும் ராகுல் காந்தி நீட்டித்துள்ளார். அநேகமாக மார்ச் மாத இறுதியில்தான் ராகுல் காந்தி டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. மார்ச் இறுதியில் ராகுல் காந்தி டெல்லி திரும்பினால் 30 நாட்களாக அவர் கட்சி பணியில் இருந்து ஓய்வு எடுத்துள்ளதாக கருதப்படும். ராகுல் காந்தியின் விடுப்பு குறித்த தகவலை பகிர்ந்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து வாய்திறக்க மறுக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி