செய்திகள் கடலுக்குள் எரிமலை வெடித்து புதிய தீவு உருவானது!…

கடலுக்குள் எரிமலை வெடித்து புதிய தீவு உருவானது!…

கடலுக்குள் எரிமலை வெடித்து புதிய தீவு உருவானது!… post thumbnail image
நுகுயாலோபோ:-தெற்கு பசிபிக் கடலில் டோங்கா என்ற நாடு உள்ளது. இதன் தலைநகர் நுகுயாலோபோவில் இருந்து வடமேற்கில் 45 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் ஹுங்கா தொங்கா– ஹங்கா ஹாபாய் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதல் 2–வது முறையாக வெடிக்க தொடங்கியது.

அதில் இருந்து பாறைகளும், எரிமலை குழம்பும் வெளியேறிய வண்ணம் இருந்தது. கரும்புகையை கக்கிய படியும் காட்சி அளித்தது. வெடித்து சிதறிய எரிமலை தற்போது அமைதியாகி விட்டது.
இந்நிலையில் எரிமலையில் இருந்து வெளியேறிய தீக்குழம்பு மற்றும் பாறைகள் தற்போது இறுகி அங்கு புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.

அந்த தீவு 1,640 அடி நீளம் உள்ளது. இந்த தீவு நிலையானது அல்ல, ஆபத்தானது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு இதே எரிமலை வெடித்ததில் 2 புதிய தீவுகள் உருவானது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி