செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் டி வில்லியர்ஸ் அடித்து சாதனை!…

உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் டி வில்லியர்ஸ் அடித்து சாதனை!…

உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் டி வில்லியர்ஸ் அடித்து சாதனை!… post thumbnail image
வெலிங்டன்:-ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்கள் பல பல சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியில் சர்வ சாதரணமாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கின்றனர். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடிக்கப்பட்ட தொடரும் இதுதான்.

தென்ஆப்பிரிக்கா இந்த உலகக்கோப்பை போடடியில் நான்கு முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. அந்த அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குறைந்த பந்தில் 150 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதோடு அவர் நிற்கவில்லை. இந்த உலகக்கோப்பை போட்டியில் மட்டும் 20 சிக்சர்கள் விளாசியுள்ளார. ஒரு உலகக்கோப்பை தொடரில் மாத்யூ ஹெய்டன் 2007-ம் ஆண்டு 18 சிக்சர்கள் அடித்திருந்தார்.

அதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இதை டி வில்லியர்ஸ் இன்றைய ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு 20 சிக்சர்கள் அடித்து முறியடித்துள்ளார். கெய்ல் இந்த தொடரில் 18 சிக்சர்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்த உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 31 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி