மான்ட்வீடியோ:-உருகுவே கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான டிகோ பார்லன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். 35 வயதான பார்லன் உருகுவே அணிக்காக 112 சர்வதேச போட்டிகளில் விளையாடி 36 கோல்கள் அடித்துள்ளார்.
2011-ம் ஆண்டு கோபா-அமெரிக்கா கோப்பையை உருகுவே அணி வெல்ல காரணமாக விளங்கிய பார்லன் 2010-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் சிறந்த வீரருக்கான கோல்டன் பந்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று பார்லன் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி