செய்திகள்,திரையுலகம் குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா!…

குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா!…

குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத், ஷாலினி தம்பதிக்கு முதல் பெண் குழந்தை 2008ல் பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர், ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தும் பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஜாதகம் கணித்து விட்டதாக கூறப்படுகிறது. உயர்வான ஜாதகமாக இருப்பதாக ஜோதிடர்கள் கணித்து உள்ளனர். குழந்தை பிறந்த தேதி, நேரத்தை பார்க்கும் போது பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னம் என்கின்றனர். ஜாதகத்துக்கு பொருத்தமாக எண் கணித ஜோதிடர் நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தற்போது குடும்பத்தினர் எல்லோருக்கும் பிடித்தமான பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெயர் சூட்டு விழாவை விரைவில் நடத்த உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி