செய்திகள் ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்!… post thumbnail image
ரியாத்:-சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு எனவும் அது தனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவரது கணவனிடம் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஒட்டகம் தனது உயிர் என கூறி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் கணவனை விட ஒரு விலங்கு மீது இவ்வளவு அன்பு செலுத்துவதா என கூறி மனைவியை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்து கொடுத்த பின் கணவன் கூறியதாவது:-

நீ உன்னுடைய கணவரை விட ஒரு விலங்கு மீது அதிக அன்பு செலுத்துவது என்றால் விலங்கு போல் நானும் ஒரு விலங்காகி விடுவேன். நீ மனிதர்களுடன் வாழ தகுதி இல்லாதவள் நீ இப்போது உன்னுடைய உலகத்திற்கு செல்லலாம் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி