சிட்னி:-உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் சங்கக்கரா, ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில்,
ஜூன், ஜூலையில் டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதனால் ஆகஸ்டு மாதத்துடன் எனது டெஸ்ட் வாழ்க்கையை நிறைவு செய்து விடுவேன் என்றார். ஜூலை-ஆகஸ்டில் சொந்த மண்ணில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்டுடன் அவர் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி