செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!… post thumbnail image
கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு கடந்த 5ம் தேதி போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. அந்த விமானம் ஒரு கோல்ப் மைதானத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டி தற்போது உடல்நிலை தேறி வருகிறார். தற்போது 72 வயதாகும் போர்டு, 55 வருட பைலட் அனுபவம் உடையவராவார்.

அப்படிப்பட்ட ஹாரிசன் போர்டு இம்முறை விமான விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற இந்திய டாக்டர் ஒருவர் விரைந்தோடி சென்று அவரை காப்பாற்றிய பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்த பகுதியின் அருகே இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டரான சஞ்சய் குரானா என்பவர் தனது நண்பர்களுடன் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார். உடனடியாக விபத்துக்குள்ளான விமானத்தை நெருங்கி பார்த்தபோது உள்ளே சீட் பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட நிலையில் ஒருவர் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த விமானத்தில் இருந்து பெட்ரோல் கசிவதை வாசனையை வைத்தே கண்டுபிடித்துவிட்ட சஞ்சய், இன்னும் சற்று நேரத்துக்குள் அந்த விமானம் வெடித்து சிதறலாம் என யூகித்தார்.

கசிந்து வெளியேறிய பெட்ரோல் மீது மண்ணை அள்ளிப்போட்ட சஞ்சய், உடனடியாக விமானத்துக்குள் இருந்த நபரை தனது நண்பர்கள் துணையுடன் இழுத்து வெளியே போட்டார். காயமடைந்த நபரின் முகத்தை பார்த்தபோது அது பிரபல ஹாலிவுட் கதாநாயகன் ஹாரிசன் போர்டு என்பதை புரிந்து கொண்ட அவரும், அவரது நண்பர்களும் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அவர் உயிர் பிழைக்க உதவியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி