சென்னை:-நடிகர் விஜய்-மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஜில்லா’. தமிழில் வெற்றியடைந்த இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். முதலில் தெலுங்கில் பெரிய ஹீரோவுக்கு படத்தின் கதையை கூறியிருக்கிறார்கள். கதையை கேட்டு திருப்தியடையாத அவர் படத்தில் நடிக்க மறுத்தார். அதனால் அப்போது ரீமேக் கைவிடப்பட்டது.
தற்போது ‘ஜில்லா’ ரீமேக்கில் நடிக்க ரவிதேஜாவும் வெங்கடேஷும் ஆர்வம் காண்பித்துள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜாவும், மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷும் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பரான சரத் மரர் பெற்றுள்ளார். இப்படத்தை வீரு போட்லா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி