அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…

சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…

சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!… post thumbnail image
மாஸ்கோ:-ரஷியா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீமியா புரட்சி மூலம் மீண்டும் ரஷியாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் பகுதியிலும் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடக்கிறது.

அது உள்நாட்டு போர் ஆக மாறியுள்ளது. அதில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி மற்றும் பண உதவி வழங்குவதாக கூறி ரஷியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் பண கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். எனவே ஆடம்பர வாழ்க்கையை தியாகம் செய்யும்படி பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளும் தங்களது சம்பளத்தை குறைத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிபர் புதின் தனது சம்பளத்தில் 10 சதவீதத்தை குறைத்து பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள், அதிபர் மற்றும் அமைச்சக அலுவலக பணியாளர்களும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி