செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!… post thumbnail image
டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது செய்தது. இந்நிலையில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாடு அருகே சென்று கொண்டிருந்தது. அதை கண்டுபிடித்த அமெரிக்க விமான படையினர் சரமாரியாக குண்டு வீசினார்கள். இதில் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர்.

அந்த கப்பல் எந்த இடத்தில் மூழ்கியது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. அமெரிக்காவில் புதைபொருள் ஆய்வு நிறுவனம் ஒன்று இந்த கப்பலை கண்டுபிடிக்க தானியங்கி வாகனங்கள் மூலம் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அதில் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி