சென்னை:-சில தினங்களுக்கு முன் நடிகை சோனம் கபூரையும் பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதனால் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதி நடிகர்களிடமும் உள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவுடன் ஜெயம் ரவி, இயக்குனர் சுராஜ் ஆகியோர் மாஸ்க் அணிந்தபடி இருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர்.
திரிஷா மாஸ்க் போட்டிருந்ததை பார்த்துவிட்டு அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் திரிஷா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி