இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பினார். இந்த ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததது குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லி முதல்–மந்திரியாக பணியாற்றி வருவதால் தன்னால் கட்சி பணியும் வகிக்க முடியவில்லை. இதனால் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகி உள்ளேன். டெல்லியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி