தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500 பேர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு மட்டுமே 900 பேர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. 2004ம் ஆண்டு 216 பேர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 42 ஆக குறைந்தது. அதன் பின்னர் 22 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், கணவர், மனைவி தவிர்த்து இரண்டாவது நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிராக அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி பார்க் ஹான் சல் தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் இணைந்து வழங்கினார்கள். 2 நீதிபதிகள் மட்டும் இதை எதிர்த்தனர். எனவே மெஜாரிட்டி தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த சட்டம், செயலற்றுப்போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பில் நீதிபதி பார்க் ஹான் சல், மற்றொரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடானது என்ற வகையில் கண்டனத்துக்கு உரியது தான். ஆனால், தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்க அதிகாரம் தலையிடக்கூடாது என கூறி உள்ளார். இந்த தீர்ப்பை அடுத்து உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்று கருதப்படுகிற தென்கொரியாவின் யுனிடஸ் கார்ப்பரேஷனின் பங்கு விலை எகிறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி