செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…

பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…

பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் 2015–16ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சுரேஷ்பிரபு இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்தார். முதலில் ரெயில்வே குறித்த வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். பிறகு பட்ஜெட் உரையை படித்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

இந்திய பொருளாதாரத்தில் ரெயில்வே துறை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ரெயில்வே துறையின் வளர்ச்சி ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரெயில்வேயில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை.ரெயில்வேயில் அதிகம் முதலீடு செய்தால் அது நாடு முழுவதும் வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்யும். ஆனால் தேவையான அளவு முதலீடு செய்யப்படவில்லை. இதனால் இந்தியாவில் ரெயில்வே துறை விதிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி போன்ற ரெயில்கள் நாடெங்கும் அதிகமாக இயக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அகலப்பாதைகள் அமைத்தல், மின் வழிப்பாதைகள் அமைத்தல் போன்றவை அதிகரிக்கப்படும். அது போல சரக்கு ரெயில் போக்குவரத்தும் அதிகரிக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் ரெயில்வேயில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு உறுதி செய்யப்படும். ரெயில் போக்குவரத்து வசதியாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் இதை ஒரே நாளில் செய்துவிட முடியாது.

ரெயில் சேவையில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். 130 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய ரெயில்கள் 70 மைல் வேகத்தில் செல்கிறது. பராமரிப்பு பிரச்சனைகள் காரணமாக ரெயில் வேகம் குறைவாக உள்ளது.ரெயில் போக்குவரத்துக்கு நிறைய நிதி தேவைப்படுகிறது. நிதியில் தன்னிறைவு பெற்றால் நிறைய மாற்றம் செய்ய முடியும். இதற்காக 20 ஆயிரம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி சர்வதேச தரத்துக்கு இந்திய ரெயில்வே தரம் உயர்த்தப்படும்.ரெயில் பாதைகளின் நீளத்தை 10 சதவீதம் அதிகரித்து 1.38 லட்சம் கிலோ மீட்டராக உயர்த்தப்படும். மொத்தம் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு செய்வதில் நிதி அமைச்சகத்துக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே வேறு வழிகளில் ரெயில்வேக்கு நிதி திரட்டப்படும். ஓய்வூதிய நிதியில் இருந்து ரெயில்வேக்கு நிதி பெறப்படும்.ரெயில்வே துறைக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. என்றாலும் பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. பயணிகள் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.ரெயில்வே நிர்வாகத்தின் செலவுகள் கணிசமாக குறைக்கப்படும். ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் குறைதீர் மையங்கள் செயல்படும். அனைத்து ரெயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு மட்டுமே நிதி அளிக்க முடியாது. எனவே தனியார் துறை, பொதுத்துறை மற்றும் நிதிக்கழகங்களுடன் சேர்ந்து ரெயில்வேக்கு நிதி திரட்டப்படும்.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும். ரெயில்களின் வருகை மற்றும் தாமதம் பற்றி பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அளிக்கப்படும். 108 ரெயில் நிலையங்களில் இணையத்தளம் மூலம் உணவு பெறலாம்.ரெயில் நிலையங்களில் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயணிகளை அழைத்து வரவும், வீட்டில் இறக்கி விடவும் புதிய திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ரெயிலிலும், பேருந்துகளிலும் பயணம் செய்யும் ஒரே டிக்கெட் முறை மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தலாம்.பொது பெட்டிகளிலும் செல்போன் சார்ஜர் வசதி செய்யப்படும்.ரெயில் நிலையங்களில் பல்வேறு புதிய வசதிகள் செய்யப்படும். 400 ரெயில் நிலையங்களில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படும்.நாடெங்கும் ரூ.96,182 கோடி செலவில் 9,420 ரெயில் பாதைகள் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு ரெயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி