செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!… post thumbnail image
டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பயணம் செய்தனர். வழியில் அந்த படகு மீது சரக்குகளை ஏற்றி வந்த படகு ஒன்று மோதியது. இதனால் பயணிகள் படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

இதனால் பயணிகள் ஆற்றில் தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். இருந்தும் 66 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் தவிர தண்ணீரில் தத்தளித்த பலர் அந்த வழியாக சென்ற படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இருந்தும் இன்னும் 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பயணிகள் படகு கேப்டன் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆற்றில் மூழ்கிய படகும் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து மந்திரி ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி