செய்திகள்,திரையுலகம் ஆஸ்கர் விருது 2015 – விருது வென்றவர்கள்!…

ஆஸ்கர் விருது 2015 – விருது வென்றவர்கள்!…

ஆஸ்கர் விருது 2015 – விருது வென்றவர்கள்!… post thumbnail image
ஹாலிவுட்:-ஆஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகராக தி தியரி ஆப் எவரிதிங் திரைப்படத்தில் நடித்த எடி ரெட்மெய்ன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக ஸ்டில் அலைஸ் திரைப்படத்தில் ஜூலியன் மூரே தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராக பேர்ட்மேன் திரைப்படத்தை இயக்கிய அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட்டு(பேர்ட்மேன்) தேர்வானார். சிறந்த திரைப்படமாக பேர்ட்மேன் தேர்வு செய்யப்பட்டது. பேர்ட்மேன் மற்றும் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் ஆகிய திரைப்படங்கள் தலா 4 விருதுகளை அள்ளியது. விப்லாஷ் திரைப்படம் 2 விருதுகளை வென்றது. மற்ற விருதுகள் பற்றிய முழு பட்டியல்:

தழுவப்பட்ட திரைக்கதை : கிரஹாம் மூர், தி இமிடேஷன் கேம்
சிறந்த திரைக்கதை : அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட்டு, நிகோலஸ் ஜியாகொபோன், அலெக்சாண்டர் டினெலாரிஸ் ஜூனியர், அர்மாண்டோ பிரதர்ஸ் (பேர்ட்மேன்)
சிறந்த இசையமைப்பாளர் : அலெக்சாண்டர் டெஸ்ப்ளாட்(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த படத்தொகுப்பு : டாம் கிராஸ்(விப்லாஷ்)
சிறந்த பாடல் : க்ளோரி (திரைப்படம் : செல்மா)
சிறந்த ஆவணப்படம் : சிட்டிசன்ஃபோர்

சிறந்த துணை நடிகை : பேட்ரிசியா அர்குட்டே(பாய்ஹுட்)
சிறந்த துணை நடிகர் : ஜே.கே. சிம்மன்ஸ்(விப்லாஷ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் : பிக் ஹீரோ 6
சிறந்த ஒளிப்பதிவாளர் : இம்மானுவேல் லுபெஸ்கி(பேர்ட்மேன்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : மிலெனா கனானெரோ(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)
ஒப்பனை மற்றும் சிகையலங்காரம்: பிரான்சஸ் ஹேன்னான் மற்றும் மார்க் கவ்லியர்,(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த ஆக்‌ஷன் குறும்படம்: தி போன் கால்
ஆவண குறும்படம் : கிரைசிஸ் ஹாட்லைன்
அனிமேஷன் குறும்படம் : ஃபீஸ்ட்
சிறந்த விஷுவல் எபெக்ட் : இன்டர்ஸ்டெல்லர்
சவுண்ட் எடிட்டிங் : அமெரிக்கன் ஸ்னைப்பர்
சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் : தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி