செய்திகள்,திரையுலகம் புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!…

புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!…

புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். விஜய், சுருதிஹாசனின் பாடல் காட்சி அங்கு படமாகி வருகிறது.

படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்க விஜய் முடிவு செய்தார். நேற்று இந்த தடபுடல் விருந்து நடந்தது. விஜய் பட்டு வேட்டி சட்டை அணிந்து 700 பேருக்கும் தனது கைபட பிரியாணி பரிமாறி சாப்பிட வைத்தார். லைட்மேன்கள், துணை நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் நடிகர்கள், டிரைவர்கள், உதவி இயக்குனர்கள் உள்பட பலரும் விருந்து சாப்பிட்டார்கள். பின்னர் அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி