புனே:-புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று காணப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் புனே தீனாநாத் மங்கேஸ்கர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதனையில், மேதா குல்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சலின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த ஆஸ்பத்திரியின் தனியறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி