இதனால் மோகன்லால் அதிர்ச்சியில் இருந்தார். இந்நிலையில் முன்பு வாங்கி போட்டு இருந்த சொத்துக்களை தற்போது ஒவ்வொன்றாக விற்க துவங்கியுள்ளார். திருவனந்தபுரத்தில் மோகன்லாலுக்கு சொந்தமாக விஸ்வயோ என்ற பெயரில் டப்பிங் ஸ்டுடியோ உள்ளது. நவீன வசதிகளுடன் இந்த ஸ்டுடியோவை கட்டி இருந்தார். இதை விற்று விட்டார்.
திருவனந்தபுரத்தில்லேயே மோகன்லாலுக்கு சொந்தமாக 50 சென்ட் நிலம் இருந்தது. அதையும் விற்பனை செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளியாணி என்ற இடத்தில் 1.32 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தையும் மோகன்லால் விற்பனை செய்துள்ளார். சொத்துக்களை அவர் ஏன் விற்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் மலையாள பட உலகினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி