சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது 5.02.2015 முதல் 15.02.2015 வரை பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 65.25 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், வெளி நாடுகளில் ரூ 25.5 கோடி என மொத்தம் 91 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி