செய்திகள் பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…

பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…

பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!… post thumbnail image
ரியாத்:-பூமி சுற்றுகிறது, அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த மதகுருவின் பெயர் ஷேக் பந்தர் அல்–ஹைபாரி. இவரிடம் பூமியை பற்றி மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்ற முரண்பாடான பதிலை கூறினார். மாணவர்களிடம் பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது என்று எடுத்துக்காட்டுடன் தெரிவித்தார்.

தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றை கையில் அவர் பிடித்துக் கொண்டார். பின்னர் நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம். அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் சீனாவும் சுழல்கிறதே என்றார்.
இந்த வீடியோ ஒரு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. மதகுருவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி