செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 8,423 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 585 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கடந்த 12ம் தேதிக்கு பிறகு 15ம் தேதிக்குள் அதாவது 3 நாளில் மட்டும் 100 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். எனவே பன்றிக்காய்ச்சல் பரவலைத்தடுக்க மத்திய சுகாதார துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 165 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். குஜராத்தில் 144 பேர், மத்தியபிரதேசத்தில் 76 பேர், மராட்டியத்தில் 58 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நிறைய பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் உயிரிழப்பு ஏற்படாதபடி இந்த இரு மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி