செய்திகள்,திரையுலகம் என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை…

என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை…

என்னை அறிந்தால், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை… post thumbnail image
சென்னை:-கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது.

என்னை அறிந்தால் இரண்டு வாரங்கள் சேர்த்து மொத்தம் 4.90 கோடி வசூல் செய்துள்ளது என சென்னை பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது. அனேகன் திரைப்படத்திற்கு இதுவரை தனுஷ் படத்திற்கு இல்லாத அளவிற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

தற்போது வந்த தகவலின் படி முதல் நாள் இப்படம் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இரண்டாம் நாள் மொத்த வசூல் ரூ 20 கோடியை எட்டியது. தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் அனேகன் தெலுங்கில் வராமலேயே 3 நாட்களில் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது. அனைவருக்கும் நன்றி, நன்றி என டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி