செய்திகள் திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!… post thumbnail image
நகரி:-திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகரப் பகுதிகளிலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார்கள். திருப்பதியில் 184 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், செயின் பறிப்பு கொள்ளையர்கள் ஏராளமானோர் சிக்கினர்.

இதையடுத்து திருப்பதியில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராவை 600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பைலட் பிராஜக்ட் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வீடியோ அனலட்டிக் சாப்ட்வேர் பொருத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வாகனம் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு இடத்தில் அதிக நேரம் நின்றால் இந்த சாப்ட்வேர் மூலம் அலாரம் அடித்து காண்பித்து விடும்.

மேலும் குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். அந்த படத்தில் இருப்பவர் கண்காணிப்பு கேமரா எல்லைப் பகுதியில் எங்காவது நடமாடினால் உடனே அந்த சாப்ட்வேர் காட்டிக் கொடுத்து விடும். இதன் மூலம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். விரைவில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி