புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த மூலையிலும் சட்டவிரோத வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செய்தித்தொடர்பாளர் கூறினார். அனில் அம்பானிக்கு, எச்.எஸ்.பி.சி.யின் வெளிநாட்டு கிளை எதிலும் கணக்கு இல்லை என்று அவரது செய்தித்தொடர்பாளர் கூறினார்.
தனக்கு கருப்பு பணம் எதுவும் இல்லை என்றும், விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயல் கூறினார். மராட்டிய மாநில முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே கூறுகையில், முன்பு கூட எனது பெயர் வெளியானது. அதில் உண்மை இல்லை. நானோ, எனது மனைவியோ அல்லது குடும்பத்தினரோ வெளிநாட்டில் கணக்கு வைத்திருக்கவில்லை என்றார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்னு தாண்டனும் மறுப்பு தெரிவித்தார். எமார் எம்.ஜி.எப்., டாபர் குழுமம் ஆகியவை கருத்து தெரிவிக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி