புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அவர் சார்பில் பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி