ஆனால் இது ரஜினியின் பெயரைக் கெடுக்கும் உள்நோக்கம் இல்லை என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஜினியின் பெயரை படத்தின் தலைப்பில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து படத்துக்கு வேறு தலைப்பு வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
ஆனால் தயாரிப்பாளரோ, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்து இயக்குநர் பைசல் கூறுகையில், இந்த விஷயத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை. ரஜினியை சங்கடப்படுத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவெடுத்திருக்கிறார். அவரை என்னால் தடுக்க முடியவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி