4 நாட்கள் பயணமாக வரும் சிறிசேனா, 18ம் தேதிவரை இந்தியாவில் இருக்கிறார். இப்பயணத்தின்போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதர அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.மேலும், புத்தமத ஆன்மிக தலமான புத்தகயாவுக்கும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் சிறிசேனா செல்கிறார். இத்தகவல்களை இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறிசேனாவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நேற்று டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். இலங்கையின் 67-வது சுதந்திர தின விழாவையொட்டி உரையாற்றிய அதிபர் சிறிசேனா, இலங்கையின் முன்னேற்றத்திற்காக சர்வேத சமூகத்தின் ஆதரவை பெற நடுநிலையான வெளியுறவு கொள்கையை தனது அரசு பின்பற்றும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி