மும்பை:-பிரபல நடிகர் ஷாருக்கானின் பங்களா மும்பை மன்னாத் பகுதியில் உள்ளது. அவர் தனது ரசிகர்களை சந்திப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் உள்ள திறந்த வெளியை ஆக்கிரமித்து இரும்பு கூண்டு போல் அமைத்து சுற்றிலும் தடுப்பு வேலி போட்டுள்ளார்.
தனது பிறந்த நாள் மற்றும் மும்பையில் இருக்கும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை இந்த மேடையில் இருந்தவாறு தான் சந்திப்பது வழக்கம். இந்த இரும்பு தடுப்பு வேலி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக மும்பை மாநகராட்சிக்கு பா.ஜனதா எம்.பி. பூனம் மகாஜன் புகார் கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் வீட்டின் முன் உள்ள ஆக்கிரமிப்பு இரும்பு மேடையை ஒரு வாரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி