செய்திகள்,திரையுலகம் எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…

எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…

எலியாக மாறிய நடிகர் வடிவேலு!… post thumbnail image
சென்னை:-அரசியல் பிரவேசம் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். யுவராஜ் இயக்கிய அந்த படம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களுக்கே திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் கதாநாயகனாகவே களம் இறங்கியுள்ளார் வடிவேலு. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு எலி என பெயரிப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம கொடுத்து எலி தயாராக உள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி