ஜுராசிக் பார்க் படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு திரைப்படம் அதே வரிசையில் தயாராகி வருகிறது. வரும் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்திற்கு ஜுராசிக் வேர்ல்டு (Jurassic World) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை காலின் ட்ரேவோரோ என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். மைக்கேல் கியாச்சினோ அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தில் கிறிஸ் பிராட், ப்ரிஸ் தாலஸ் ஹோவர்ட், வின்சென்ட் டி’ ஒனோப்ரியோ, ஜாக் ஜான்சன், நிக் ராபின்சன் , டை சிம்ப்கின்ஸ், BD வாங், இர்ஃபான் கான், ஓமர் சை, ஜூடி க்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள டைனோசர் பட ரசிகர்கள் இந்த டிரைலரை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி