இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ். இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் தசாவதாரம் மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கான அரங்குகள் அமைக்கபெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ளபட்டன.
தற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் ‘புலி’ படத்தின் படபிடிப்பு பிரத்யேகமாக நடைப்பெற்று வருகிறது. படபிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த ஏக் நிரஞ்சன், குஷி குஷிகா, ஸ்வக்தம், சண்டதே சண்டதே படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி