பாரிஸ்:-கணினி நிறுவனங்களின் ஜாம்பவானாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக ‘ஐபிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதென்றும், கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகவும் மோசமான நடவடிக்கை என்றும் பல ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.
ஆனால் அந்நிறுவனமோ இதுகுறித்து மேலதிக தகவல்களை தரவும், 1 லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலையும் மறுத்துள்ளது. கடந்த வாரம் ‘ஐபிஎம்’ வெளியிட்ட அறிக்கையில் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் தங்கள் லாபத்தில் 12% குறைந்துள்ளதாக {16 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் பத்து லட்சம் கோடிக்கும் மேல்)} தெரிவித்துள்ளது. இதே போல் லாபம் குறைந்ததை காரணம் காட்டி 1993 ஆம் ஆண்டும் 60,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது நினைவுகூரத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி