செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…

நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…

நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!… post thumbnail image
பிரபல நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் டூரிங் டாக்கிஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை எடுக்கிறார். ஒரே படத்தில் இரண்டு கதையுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே நான் சிகப்பு மனிதன் படம் வந்தது. மீண்டும் இருவரும் இணைகிறார்கள். படம் பற்றி எஸ்.ஏ. சந்திரசேகரன் சொல்கிறார்:-

பேசும் படங்கள், மவுனப் படங்களாக இருந்த காலம் தொட்டு இந்திய திரையரங்குகளுக்கு முன்னோடியாக இருந்தவை டூரிங் டாக்கிஸ்தான். ஓடி ஓடி, வேலை பார்த்தவர்கள் களைப்பாறும் வேடந்தாங்கலாக இருந்த ஒரே பொழுது போக்கு இடம் டூரிங் டாக்கிஸ். ஆனால் இப்போது அவை அரிதாகிவிட்டன. மக்களோடு மக்களாக இருந்த அந்த டூரிங் டாக்கிஸ்ஸை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கிறேன். இது மூன்று கதைகளை கொண்டதாக இருக்கும். மூன்று கதைகளும் மூன்று வித்தியாசமான வாழ்க்கையைச் சொல்லும். மூன்று கதைகளுக்கும் வெவ்வேறு நடிகர்கள் மூன்று ஒளிப்பதிவாளர்கள் மூன்று படத்தொகுப்பாளர்கள் என பல தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர்.
சுமார் 65 படங்களை இயக்கிவிட்ட எனக்கு டூரிங் டாக்கிஸ் படம் இன்னொரு முத்திரையை பெற்றுத் தரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி