அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!… post thumbnail image
அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:–

1. இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த அணுசக்தி ஒப்பந்த தடை நீக்கம்.

2. இந்திய அணுசக்தி துறையில் கம்பெனிகளின் எளிதான முதலீடு.

3. வர்த்தகம், இந்தியாவில் வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு புதிய முயற்சிகளினால் ரூ.24 ஆயிரம் கோடி நிதி அறிவிப்பு.

4. சுத்தமான எரிசக்தியை உருவாக்க திட்டம்.

5. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்தியாவுக்கு 2 ஆண்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு.

6. அதிகாரத்துவத்தில் இரு நாடுகள் இடையே நம்பகத்தன்மை.

7. இரு நாடுகள் இடையே நட்புணர்வு, பிரதமர் அலுவலகம் உள்பட மிகப்பெரிய ஒப்பந்தங்கள்.

8. பாதுகாப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம். 10 ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு தொழில்நுட்ப ஒப்பந்தம் புதுப்பிப்பு.

9. ஆப்கானிஸ்தானுடன் மந்திரிகள் மட்டத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை.

10. பாரம்பரிய மருந்துகள் உள்பட பல்வேறு சுகாதார விஷயத்தில் ஆரோக்கியமான பேச்சு வார்த்தை.

11. விசாகப்பட்டினம், அலாகாபாத், அஜ்மீர் ஆகிய இடங்களில் ஸ்மார்ட்சிட்டி குறித்து ஒப்பந்தம்.

12. பாதுகாப்பு உபகரணங்களை இணைத்து வழங்க முடிவு.

13. இந்திய தொழில் பணியில் மாசற்ற சுற்றுப்புற சூழல் மேலும் பருவ நிலை மாற்றம்.

14. சீனாவுக்கு விடுக்கப்பட்ட பலமான தகவல்.

15. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்த நடவடிக்கை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி