செய்திகள்,திரையுலகம் ’ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.184 கோடி வசூல்!…

’ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.184 கோடி வசூல்!…

’ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.184 கோடி வசூல்!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது ‘ஐ’. இப்படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடபட்டது. உலக அளவில் 2 வார முடிவில் 12 நாட்களில் ஐ படம் ரூ.184 .25 கோடி வசூல் செய்து உள்ளது. இந்தியாவில் மட்டும் பல மொழிகளில் வெளியான ஐ படம் ரூ 146.50 கோடி வசூல் செய்து உள்ளது.இதில் மொத்த வசூல் ரூ.116.75 கோடியாகும்.முதல் வாரம் ஐ படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடி வசூல் செய்தது.

ஐ படம் தமிழ் நாட்டில் மொத்த வசூல் ரூ.62.4 கோடி( நிகர வசூல் ரூ.48 கோடி)
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மொத்த வசூல் ரூ.38.5 கோடி( நிகர வசூல் ரூ.33 கோடி)
கேரளா மொத்த வசூல் ரூ.14.50 கோடி( நிகர வசூல் ரூ.12 கோடி)
கர்நாடகா மொத்த வசூல் ரூ.11.70 கோடி( நிகர வசூல் ரூ.9 கோடி)
தென்னிந்திய வர்த்தகம் மட்டும் மொத்தம் ரூ.127.10 கோடி( நிகர வசூல்.ரூ.102 கோடி)
தெலுங்கு மொழி படம் மட்டும் மொத்தம் ரூ.3.70 கோடி வசூல்( நிகர வசூல் ரூ.2,75 கொடி)
இந்தி மொழி மொத்த வசூல் ரூ.16 கோடி (ரூ. 12 கோடி நிகர வசூல்)

உலக அளவில் அமெரிக்க மற்றும் மலேசியாவிலும் ஐ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து உள்ளது. மலேசிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.12.50 கோடியாகும். அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.9.75 கோடியாகும். இங்கிலாந்தில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.3.40 கோடியாகும்.ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1.80 கோடியாகும்.உலகின் பிறபகுதிகளில் ரூ.10 கோடி வசூல் செய்து உள்ளது. ஐ படத்திற்கு முதல் வாரத்தில் இருந்த வரவேற்பு அடுத்த வாரத்திலும் தொடர்ந்து உள்ளது. தொடர்ந்து ஐ படம் நன்கு ஓடிகொண்டு இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் இன்னும் அதிகமான வசூலை கொடுக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி