அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…

நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…

நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடக காங்கிரஸ் மந்திரி சபையில் நடிகர் அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கும் முதல் – மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் அர்காவதி லே–அவுட் குடியிருப்பு பகுதி கட்டுவதற்காக அரசு ஆணையின் பேரில் நிலத்தை விடுவித்து நிலமுறைகேடு செய்ததாக முதல் மந்திரி சித்தராமையா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த நீதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல் – மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக கவர்னரிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதல் – மந்திரி சித்த ராமையாவுக்கு நெருக்கடி கொடுக்க நடிகர் அம்பரிஷ் முடிவு செய்துள்ளார். அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடிகர் அம்பரிஷ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இன்று காலை தகவல் பரவியது. இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி