செய்திகள்,திரையுலகம் ‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!… post thumbnail image
சென்னை:-‘பாகுபலி’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கின்றனர். ‘நான் ஈ’, ‘மகதீரா’ படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், சுதீப், அனுஷ்கா, தமன்னா போன்றோரும் நடிக்கின்றனர். ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கிறது. தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்ட ஒருவர்தான் இதை திருட்டுதனமாக காப்பி எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரை பிடித்து வைத்தும் விசாரிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி