செய்திகள் திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!…

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!…

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!… post thumbnail image
நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று ஒரே நாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை சூரிய பிரமை வாகனத்தில் தொடங்கிய வீதி உலா இரவு சந்திரபிரமை வாகனத்துடன் நிறைவு பெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ரத சப்தமியையொட்டி வி.ஐ.பி. தரிசனம், பாத யாத்திரையாக வருபவர்களுக்கு வழங்கும் திவ்யதரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தர்ம தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அதாவது அதிகாலையில் கட்டண சேவையாக நடக்கும் சுப்ரபாத சேவை ஏகாந்த சேவையாக நடத்தப்பட்டது. பின்னர் 2.15 மணி முதல் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணி வரை 75 ஆயிரம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். நள்ளிரவு இது 1 லட்சத்தை தாண்டியது.

ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்து இதுவரை நடக்காத ஒன்று என கூறப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வி.ஐ.பி. மற்றும் திவ்யதரிசனத்தை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராவ் செய்த ஏற்பாட்டால் இந்த சாதனையை எட்ட முடிந்ததாக சொல்லப்படுகிறது. தேவஸ்தான அதிகாரிகளை பக்தர்கள் பாராட்டினார்கள். ரதசப்தமி விழா முடிந்ததும் தமிழக பக்தர்கள் குறிப்பாக காஞ்சீபுரம், திருத்தணி செல்பவர்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இங்கு புறப்பட்ட பஸ்கள் புத்தூரில் நிறுத்தப்பட்டு பணிமனைக்கு சென்று விட்டது. அங்கிருந்து பஸ்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் சென்னைக்கு தாராளமாக பஸ்கள் விடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ.2.98 கோடி கிடைத்தது. மேலும் நன்கொடையாக ரூ.53 லட்சம் கிடைத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி