சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தில் பணியாற்றும் போது அஜித்திற்கும், கௌதம் மேனனுக்கும் சண்டை என கூறப்பட்டது.
மேலும், படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கௌதம் மேனன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மனம் திறந்தார். இதில், அஜித்துடன் இன்றளவும் நல்ல நட்புடன் தான் இருக்கிறேன், மேலும், படத்தில் 2 கிளைமேக்ஸ் காட்சியை நான் ஷுட் செய்ய வில்லை என கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி